இன்றைய சினிமா செய்திகள் (20-11-2019)

Today Tamil Cinema News 20-11-2019

பொம்மை இது S J சூர்யா படத்தின் டைட்டில்!

இயக்கும் பணியை நிறுத்திவிட்டு தொடர்ந்து வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களில் நடித்து வரும் S J சூர்யா. தற்போது, ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் நடித்து வருகிறார். பொம்மை படத்தில் S J சூர்யாக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

bommai-000

ரஜினிக்கு ‘ICON OF GOLDEN JUBILEE’ விருது!

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு விருதை வழங்க நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். 50ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ரஜினிக்கு ‘ICON OF GOLDEN JUBILEE’ விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து வழங்கினார்கள்.

‘ICON-OF-GOLDEN-JUBILEE-000

முரடா முரடா பாடல் நாளை வெளியாகிறது!

அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படம் தனுசு ராசி நேயர்களே. காதல், நகைச்சுவை கொண்டு உருவாகிவரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முரடா பாடல் நாளை வெளியாகிறது. தனுசு ராசி நேயர்களே படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Murada-Murada-00

Exit mobile version