Today Tamil Cinema News 20-01-2020 | இன்றைய சினிமா செய்திகள்

ஒரு வாரத்தில் மாறா தீம் வெளியாகிறது!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யா பாடியுள்ள மாறா தீம் விரைவில் வெளியாகும் என்று ஜிவி பிரகாஷ்குமார் அறிவித்திருந்த நிலையில் தற்போது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று ஜி.வி. பிரகாஷ் குமார் டிவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

பொன் மாணிக்கவேல் படத்தின் புது அப்டேட்!

நடனப்புயல் பிரபுதேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல். படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். படத்திற்கு இசை டி இமான். கதை. திரைக்கதை. எழுதி. இயக்கியுள்ளார் ஏசி முகில் செல்லப்பன். நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்த பொன் மாணிக்கவேல் படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், நேமிசந்த் ஜாபக் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள பொன் மாணிக்கவேல் படத்தின் டிரைலர் நாளை மாலை (Jan-21) 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Pon Manickavel Trailer poster
Pon Manickavel Trailer poster

விஜய்யின் ரசிகர் இல்லத்திற்கு சென்று மகிழ்வித்த தளபதியின் அம்மா அப்பா!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மாபெரும் வசூல் மற்றும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த படமாக அமைந்து விடும். சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் அதிக லாபங்களை ஈட்டிய படமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவரின் இல்லத்திற்கு விஜய்யின் அப்பா. அம்மா இருவரும் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாக படுத்தி உள்ளது.

vijay father and mother photo
vijay father and mother photo
vijay mother photo
vijay mother photo
vijay mother pic
vijay mother pic
vijay father and mother still
vijay father and mother still
Exit mobile version