இன்றைய சினிமா செய்திகள் (19-12-2019)

Today Tamil Cinema News 19-12-2019

2.5 கோடி பார்வையாளர்களை கடந்த ‘சும்மா கிழி’ பாடல்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
EME645cUYAERtGx

இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், தரபார் படத்திலிருந்து வெளியான ‘சும்மா கிழி’ பாடல் யூடியூபில் 3 கோடி பார்வைகளைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஹீரோவா தம்பியா வெல்லப்போவது யார்!

இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படம் ஹீரோ. இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், விவேக், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிரப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

thambi-hero-000

இந்நிலையில், கைதி திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ள படம் தம்பி. தம்பி படத்தை பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தம்பி திரைப்படமும் நாளை வெளியாக உள்ள சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்துடன் மோத உள்ளது. இந்த இரு படங்களின் வெற்றி யாருக்கு என்பது நாளை தெரிந்துவிடும்.

இருட்டு அறையில் முரட்டுகுத்து இரண்டாம் பாகத்தில் இணைந்த ஷாலு ஷ்ம்மு!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷ்ம்மு. அதன் பின்பு படவாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார் ஷாலு ஷ்ம்மு. இந்நிலையில், சந்தோஷ் பி.ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

Shalu-Shamu-000

தற்போது ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டுகுத்து படத்தில் இணைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனது கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஷாலு ஷம்மு இப்படத்தின் மூலம் மேலும் ரசிகர்களை திக்குமுக்காட வைப்பார் என்பது தெரிகிறது.

Exit mobile version