இன்றைய சினிமா செய்திகள் (19-11-2019)

Today Tamil Cinema News

அப்செட்டில் ‘தளபதி 64’ படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 64-வது படம் என்பதால், தற்போதைக்கு ‘தளபதி 64’ என அழைக்கப்பட்டு வருகிறது. சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு புதுடெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் (2020) ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதால், தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘தளபதி 64’ படத்தின் விஜயின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. குறிப்பாக, நேற்று தளபதி விஜய் ஒரு மேஜையில் படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் நேற்று வெளியாகியது. இப்படி புகைப்படங்கள் லீக்காவதால், அப்செட்டில் ‘தளபதி 64’ படக்குழு.

thalapathy-64-000

மகேஷ்பாபுவின் சரிலேரு நீகேவரு படத்தின் டீசர் வெளியாகும் தேதி!

அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ்பாபு ராணுவ அதிகாரியாக நடிக்கும் படம் சரிலேரு நீகேவரு. சரிலேரு நீகேவரு படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தண்ணா நடிக்கிறார். விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சரிலேரு நீகேவரு படத்தை மகேஷ் பாபு, தில் ராஜு இணைந்து தயாரிக்கிறார்கள். இந்நிலையில், சரிலேரு நீகேவரு படத்தின் டீசர் வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

EJvR4nHVAAEdA-i

சினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

முழுக்க முழுக்க திரில்லர் சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்து வரும் அருண் விஜய் தற்போது, வாகா படத்தின் இயக்குனர் குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அருண் விஜய்க்கு இன்று பிறந்த நாள் என்பதால். சினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளது. சினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்தினம் இன்று வெளியிட்டார்.

SINAM-000

கமலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ஒடிசா முதல்வர்!

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். ஏற்கெனவே அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஒடிசா மாநில செஞ்சுரியன் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இன்று நடைபெறும் விழாவில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

kamal-000

Exit mobile version