Today Tamil Cinema News 18-05-2020

Today Tamil Cinema News 18-05-2020
Today Tamil Cinema News 18-05-2020

மாஸ்டர் ட்ரைலர் பற்றி முக்கிய தகவலை கூறிய : அர்ஜுன் தாஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் மாஸ்டர். படத்தில் தளபதி விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகன், ஆண்ட்ரியா என பெரும் நடிகர் பட்டாளமே நடித்து இருக்கிறார்கள்.

படம் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா நோய் தாக்கத்தின் அதிகரிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து திரையரங்குகளும் தற்போது மூடியிருக்கிறது. இதனால் மாஸ்டர் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டிரைலரை நான் பார்த்துவிட்டேன் என்று அர்ஜுன் தாஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். மேலும் டிரைலரில் தளபதி விஜய் ஒரு வசனம் பேசி இருக்கிறார்.

அந்த வசனத்தை தளபதி விஜய் ரசிகர்கள் கேட்டால் திரும்பத் திரும்ப அந்த ட்ரெய்லரை பார்க்க தூண்டும் வகையில் தளபதி விஜய் அந்த வசனத்தை பேசி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அர்ஜுன் தாஸ்.

அர்ஜுன் தாஸ் இந்த பதிவை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் இடம் எப்பொழுது படத்தின் டிரைலரை வெளியிடுவீர்கள் என்று அன்பாக மிரட்டி வருகிறார்கள்.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்

மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் தமன்னா!

பாகுபலி வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமவுலி ஆர்.ஆர்.ஆர் (ரௌத்திரம் ரணம் ருத்திரம்) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகிறார். ராம்சரண் ஜோடியாக ஆலியாபட்டும் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக இங்கிலாந்து நடிகை நடிக்கிறார்கள்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் தமன்னா நடிக்கிறாரா என்று கேட்டதற்கு ஆம் நடிக்கிறார் அவருக்கான பிரத்தியேகமான சண்டைக் காட்சியும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார் ராஜமௌலி.

எஸ்.எஸ் ராஜமவுலி, தமன்னா
எஸ்.எஸ் ராஜமவுலி, தமன்னா

டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி!

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் டைரக்சன் செய்கிறார். டாக்டர் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் ஷுட்டிங் தடைபட்டது. ஊரடங்கு முடிந்த பின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் படமாக்க உள்ளனர். அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்தால் படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன்
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன்
Exit mobile version