Live Cinema News

தளபதி விஜய்யை சந்தித்த வருண் சக்கரவர்த்தி

 

Varun Chakravarthy meet Vijay
Varun Chakravarthy meet Vijay

இந்தியா முழுவதும் ஒரு விளையாட்டிற்கு மக்கள் ஏங்கி வருகிறார்கள் என்றால் அந்த விளையாட்டு கிரிக்கெட் என்று கூறலாம்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்பு பல அரசியல் தலைவர்கள் மாறி மாறி ஆட்சி செய்து வந்தாலும்.

கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டை பொறுத்தவரை ஒரு வீரர் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு விட்டாள் ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளுவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டனர்.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த சிறப்பான நிகழ்வை பாராட்டும் விதமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தளபதி விஜய் வருண் சக்கரவர்த்தி அழைத்து நேரில் சந்தித்து தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார் விஜய் .

இந்த நிகழ்வை வருண் சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version