Today Tamil Cinema News 18-04-2020

ரசிகருக்கு கோபமாக பதிலளித்த விஜய் பட இயக்குனர்!

உலகமே கொரோனா என்ற நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில். சற்று அதன் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் படம் வெளியாகவில்லை.

தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் வருகின்ற மே மாதம் 4-ஆம் தேதி மக்கள் வெளியே வர அரசு உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என்று கூறுங்கள் என்று கேட்டதற்கு நாம் முதலில் உயிர் பிழைப்போம் மற்றதை பிறகு பேசுவோம் என்று கோவமாக பதிலளித்துள்ளார்.

ETKmpfxU8AAdsfO
lokesh kanagaraj

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு!

பாகுபலி படத்தின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி. இவர் இயக்கத்தில் தற்போது ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் ஆர். ஆர். ஆர். திரைப்படம் கான உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

இந்நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ராஜமௌலியின் ஆர். ஆர். ஆர் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Mahesh-Babu-SS-Raja-mouli
Mahesh-Babu-SS-Raja-mouli

தனுஷ் பிறந்த நாளை கொண்டாட துவங்கிய ரசிகர்கள்!

தென்னிந்தியாவின் புரூஸ்லி என்று ரசிகர்களால் பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்ட ஒரே நடிகர் தனுஷ் என்று கூறலாம். தமிழ்சினிமாவில் தன் எதார்த்த நடிப்பின் மூலமாக இன்றுவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் தனுஷ். இவரது பிறந்த நாள் வர இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் (ஜூலை மாதம் 28-ஆம் தேதி) தனுஷ் ரசிகர்கள் இப்போதே அவரின் பிறந்தநாளை கொண்டாட தொடங்கியுள்ளார்கள்.

100-Days-For-Dhanush-BDay
100-Days-For-Dhanush-BDay
Exit mobile version