Today Tamil Cinema News 18-02-2020

Today tamil cinema news 18-2-2020

தள்ளிப் போகாதே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர். கண்ணன், அந்த படத்தை தொடர்ந்து, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன், பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில், ஆர். கண்ணன் அதர்வாவுடன் இணைந்து தள்ளிப் போகாதே படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். வேலை இல்லா பட்டதாரி, வானம் கொட்டட்டும் படங்களில் நடித்துள்ள அமுல் பேபி அமிதாஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும், இருக்கும் ரொமான்டிக் போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது.

Thalli Pogathey First Look
Thalli Pogathey First Look

மாநாடு படப்பிடிப்பு துவங்கும் தேதி!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் படம் மாநாடு. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மாநாடு படப்பிடிப்பு நாளை (19-02-2020)துவங்கும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதிராஜா, S.J. சூர்யா எஎன பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்தை சுரேஷ் காமாட்சி மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Maanaadu
Maanaadu

தனுஷ்40 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி!

அசுரன் வெற்றிக்குப் பிறகு தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயர் வைக்காத படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டையும் படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளது.

அசுரன் படத்திற்கு பிறகு வெளியாகும் படம் இது என்பதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்புடன் படத்தின் தலைப்பு என்ன இருக்கும் என்றும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் எவ்வாறு இருக்கும் என்று மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

D40 First Look
D40 First Look
Exit mobile version