இன்றைய சினிமா செய்திகள் (17-12-2019)

Today Tamil Cinema News 17-12-2019

தர்பார் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் குழுமம்!

சமீப காலமாக தொடர்ந்து வெளியாகும் பெரிய படங்களின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றி வருகிறது. குறிப்பாக, விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில், சிவகார்த்திகேயனின் ஹீரோ, சூர்யாவின் சூரரைப்போற்று, தனுஷின் பட்டாசு, என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து சன் குழுமம் வாங்கி வருகிறது.

தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை சன் குழுமம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது.

வெற்றிகரமாக 75-வது நாளை கடந்த அசுரன்!

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நில அபகரிப்பு கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் அசுரன். தனுஷின் அசாத்திய நடிப்பால் அசுரன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த படமாக அமைந்தது.

Asuran75Days-Running-successfully-000

இதன்மூலம், தனுஷின் முதல் 100 கோடி படம் என்ற பெருமையும் அசுரன் பெற்றது. இந்நிலையில், அசுரன் படம் இன்றுடன் 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியா. படத்தில் இவரின் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது. ஜோக்கர் படத்தை அடுத்து ரம்யா பாண்டியனுக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

ramya-00

இதனால் தனது பட வாய்ப்புகளை அதிகப்படுத்த அவர் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். தற்போது மீண்டும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அனைத்து ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Exit mobile version