இன்றைய சினிமா செய்திகள் (16-12-2019)

today-tamil-cinema-news-16-12-2019

Today Tamil Cinema News 16-12-2019

மோகன்லால் நடிக்கும் ராம்!

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் ராம். மோகன்லாலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். ராம் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை மற்றும் சுதான் எஸ் பிள்ளை ஆகியோர் தயாரிக்கின்றனர்.

ram-1st-look-poster-00

ராம் படம் அடுத்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

மாஸாக வெளியான தர்பார் டிரைலர்!

ரஜினி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தர்பார் படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. தர்பார் ட்ரெய்லர் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது.

குறிப்பாக டிரெய்லரில் ரஜினிகாந்த் அவர்கள் கூறும் வசனம் ஒன்று “ஒரிஜினலாவே நான் வில்லன்மா.. “இதெப்படி இருக்கு.. போன்ற வசனங்கள் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தர்பார் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகிறது.

புதிய கெட்டப்பில் தனுஷ்!

வடசென்னை, வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

dhanush-000

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Exit mobile version