Today Tamil Cinema News 16-11-2019
தம்பி இது ஜோதிகா, கார்த்தி படத்தின் தலைப்பு!
பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா, கார்த்தி நடிக்கும் படத்திற்கு தம்பி என பெயர் வைத்துள்ளார்கள். தம்பி படத்தில் ஜோதிகா அக்காவாக கார்த்தி தம்பியாக நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். தம்பி படத்தின் டீஸர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் ரசிகர்கள்!
மாணவி சுபஸ்ரீ மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் பேனர் வைக்கும் கலாச்சாரம் இல்லை. இந்நிலையில், தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளியான படம் பிகில். பொதுவாக விஜய் படம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர் வைக்கும் விஜய் ரசிகர்கள் இந்த தடவை பேனர் எங்கும் வைக்கவில்லை.
அதற்கு பதிலாக விஜய் ரசிகர்கள் பல நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்கள். அதில் ஒன்றாக தேனி விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பாக தேனி பகுதியில் உள்ள இரண்டு ஏழை விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவியாக அளித்துள்ளார்கள். விஜய் ரசிகர்களின் இந்த செயலை தேனி மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
தனுஷ் உடன் மோதும் ஆரவ்!
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்கும் மார்க்கெட் ராஜா திரைப்படம் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகிறது. அதே நாளில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் வெளியாகிறது. இதன் மூலம் தனுஷ், ஆரவ் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.