Today Tamil Cinema News 16-05-2020

Today Tamil Cinema News 16-05-2020
Today Tamil Cinema News 16-05-2020

விண்ணைத்தாண்டி வருவாயா படக்குழுவுடன் மீண்டும் இணைந்த : ரகுமான்!

2010-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்றது.

அதுமட்டுமின்றி சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த திரைப்படமாக வின்னைதாண்டி வருவாயா அமைந்தது.

தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சினிமா துறைகள் முடங்கி போயுள்ளது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கௌதம் மேனன் தற்போது விண்ணை தாண்டி வருவாயா படத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை வைத்து ஒரு ஷார்ட் பிலிம் ஒன்றை இயக்கி உள்ளார். அந்த ஷார்ட் பிலிம்க்கு கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயர் வைத்துள்ளார்கள். இதில் சிம்புவும், த்ரிஷாவும் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த ஷார்ட் பிலிம்க்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

str-a.r.rahman
str a.r. rahman Gautham vasudev menon

லாக் டவுனில் விதவிதமான புத்தகங்களை படிக்கும் மாளவிகா!

தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகன். தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் அனைவரும் அவர்கள் அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஒய்யாரமாக புத்தகத்தை படிக்கும் மாளவிகா மோகன்
ஒய்யாரமாக புத்தகத்தை படிக்கும் மாளவிகா மோகன்

அதேபோல விஜயின் நடிகை மாளவிகா மோகனன் இந்த நாட்களில் தனது வீட்டில் தினமும் ஒரு புத்தகங்களை படித்து வருகிறாராம். தற்போது அவர் படிக்கும் புத்தகங்களை புகைப்படத்துடன் டுவிட்டரிலும் பதிவிட்டு வருகிறார் மாளவிகா மோகனன்.

படுக்கை அறையிலும் புத்தகம் மாளவிகா மோகனன்
படுக்கை அறையிலும் புத்தகம் மாளவிகா மோகனன்

சந்தானம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கண்ணன்!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதாம்.

தற்போது எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த மாத இறுதிக்குள் எடிட்டிங் பணிகள் முடிந்து படம் சென்சார் போர்டுக்கு சென்றுவிடும் என்று ஆர். கண்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பிஸ்கோத் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

கடற்கரையில் உடற்பயிற்சி செய்யும் பாலிவுட் நடிகை!

பாலிவுட் நடிகை சௌந்தர்யா ஷர்மா கடற்கரையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் டுவிட்டரில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Exit mobile version