Today Tamil Cinema News 15-05-2020

Today Tamil Cinema News 15-05-2020
Today Tamil Cinema News 15-05-2020

அமேசானில் வெளியாகும் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்கள்!

கொரோனா நோய் பிடியில் இந்தியா பெறும் பாதிப்பில் இருக்கிறது. இதனால் பல துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக திரைத்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சொன்ன தேதியில் வெளியாக இருந்த பல படங்கள் தற்போது வெளியாகாமல் தவித்து வருகிறது.

ஆகையால், ஏற்கனவே வெளியாக இருந்த சிறு பட்ஜெட் படங்கள் தற்போது அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியாக முயற்சி செய்து வருகிறார்கள்.

இதனிடையே, தான் ஜோதிகா நடிப்பில் வெளியாக உள்ள பொன்மகள்வந்தாள் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் என இந்த 2 தமிழ் படங்களும் நேரடியாக OTT யில் வெளியாக இருப்பதாக அமேசான் பிரைம் தேதியுடன் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார்கள்.

Amazon Prime
Ponmagal Vandhal Penguin

இரண்டு பாகங்களாக வெளியாகும் கமல் படம்!

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா மற்றும் நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை அனிருத்.

இதனிடையே, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் சுமார் 60% நிறைவு பெற்றுள்ளதாம். தற்போது அரசாங்கம் எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபடலாம் என்று உத்தரவிட்டு உள்ளதால்.

இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படத்தை எடிட்டிங் செய்து பார்த்தபோது சுமார் 6 மணி நேரம் படம் ஓடுகிறது.

ஆகையால் இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட சங்கர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Indian2
Indian2 movie poster

டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் நான்ரசிக்கும் தளபதிவிஜய் #TAG!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். இவரது ரசிகர்கள் நாள்தோறும் டுவிட்டரில் விதவிதமான #TAG கொண்டு தளபதி விஜயின் புகழை உச்சத்தில் கொண்டு சென்று வருகிறார்கள். தற்போது ட்விட்டரில் நான் ரசிக்கும் தளபதி என்ற #TAG ட்ரெண்டாகி வருகிறது.

vijay
vijay
Exit mobile version