Today Tamil Cinema News 14-01-2020 | இன்றைய சினிமா செய்திகள்

ஜீவா நடிக்கும் சீரு படத்தின் புது அப்டேட்!

ஜீவா நடிக்கும் புதிய படம் சீரு. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். படத்திற்கு இசை டி இமான். சீரு படத்தை வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலின் சார்பாக இஷாரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில், சிறு படத்தின் முதல் வீடியோ சாங் வா வாசுகி என்ற பாடல் வருகின்ற 17-ஆம் தேதி வெளியாகிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதிரடி திரில்லர் உருவாகும் சீரு படத்தை படத்தை ரத்தினா சிவா எழுதி இயக்குகிறார்.

வி மேகசீன் அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த இந்துஜா!

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா. அதன்பின்பு மெர்குரி, பில்லா பாண்டி, சூப்பர் டூப்பர் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்பு பிகில் படத்தில் பத்து பெண்களில் ஒருவராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், பிரபல மேகஸின் ஆன வி மேகசீன் பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இந்துஜா.

Indhuja-at-We-Magazine-cover-000
Indhuja latest photo
Indhuja-at-We-Magazine-cover-00ui
Indhuja cute image

4 நாட்களில் தர்பார் இத்தனை கோடி வசூலா!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9-ஆம் தேதி 5000 திரையரங்குகளில் வெளியான தர்பார் 4 நாட்களில் சுமார் 150 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் லைகா புரொடக்ஷன் தெரிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு மூலம் தர்பார் திரைப்படம் வசூலில் ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது

darbar-box-office-00

Exit mobile version