Today Tamil Cinema News 11-01-2020 | இன்றைய சினிமா செய்திகள்

Today Tamil Cinema News 11-01-2020

எஃப். ஐ. ஆர். படத்தின் டீசர் வெளியாகும் தேதி!

தமிழ் சினிமாவில் உயிர் புது கதைகளை எடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால் தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப் ஐ ஆர் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் கரு காஷ்மீர், ஐ.எஸ்.ஐ.எஸ்., இலங்கை, பயங்கரவாத தாக்குதல்கள் அதை இந்திய அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதே படத்தின் கதை.

FIR-Second-Look-00
fir movie poster

விஷ்ணு விஷால் படத்தில் இந்திய அரசின் ரகசிய ஏஜென்டாக நடித்திருக்கிறார். 75 சதவிதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில். படத்தின் டீஸர் குடியரசு தினமான வருகின்ற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகிறது.

பட்டாசு படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்த அரசு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு பட்டாசு உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகிறது. படத்தில் தனுஷ் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பட்டாசு படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். படம் வெளியாகும் பொங்கல் அன்று சிறப்பு காட்சிகள் போட அரசு அனுமதி அளித்துள்ளதால்.

pattas-from-jan15th-2020-00
Dhanush’s Pattas will begin with 5am FDFSs on Jan 15th across all the usual early show theaters in TN

அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் துவங்க திட்டமிட்டு உள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை சிறப்புக் காட்சி அதிகம் போடப்பட்டால் தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக பட்டாசு திகழ்வது உறுதி.

வெற்றிகரமாக நூறாவது நாளை கடந்த அசுரன்!

 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் கடந்த ஆண்டு அக்டோபர் 4, 2019 அன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற அசுரன் திரைப்படம் வசூலில் 100 கோடியை எட்டியது. தனுஷ் நடிப்பில் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை அசுரன் பெற்றது.

Asuran reach 100 day

இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்களை கடந்து ரோகிணி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அசுரன் படத்தின் இந்த வெற்றியை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு படத்தின் போஸ்டரை டிவிட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Exit mobile version