இன்றைய சினிமா செய்திகள் (10-12-2019)

Today-Tamil-Cinema-News-10-12-2019
Today Tamil Cinema News 10-12-2019

2019 இல் அதிக ட்வீட் செய்யப்பட்ட ஹேஸ்டேக்குகள் பட்டியலில் முதலிடத்தில் பிகில்!

அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிகில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

bigil-000

இந்நிலையில், இந்த ஆண்டு அதிக நபர்கள் ட்வீட் செய்யப்பட்ட ஹேஸ்டேக்குகள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் பிகில் உள்ளது.

ஆர்யா நடிக்கும் டெடி!

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் டெடி. க்ரைம் கலந்த திரில்லர் இல் உருவாகி வரும் டெடி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி நடிகையுமான சாயிசா நடிக்கிறார்.

teddy-000

இவர்களுடன் சதீஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு D. இமான் இசை அமைக்கிறார். டெடி படத்திற்கு பாடல்கள் மதன் கார்க்கி எழுதுகிறார். டெடி படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். டெடி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

வால்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் சி.பி. சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் வால்டர். சி.பி. சத்யராஜ் ஜோடியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் என்.நாதராஜ சுப்பிரமணி, ரித்திவிகா, சனம் ஷெட்டி, என பெரும் நடிகர் பட்டாளமே வால்டர் படத்தில் நடித்துள்ளார்கள்.

walter-000

வால்டர் படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரிக்கிறார். இந்நிலையில், இயக்குனர் எஸ். ஜே. சூர்யா வால்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Exit mobile version