Today Tamil Cinema News 10-06-2020

Today Tamil Cinema News 10-06-2020
Today Tamil Cinema News 10-06-2020

கன்னடத்தில் அசுரன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு மிக பிரமாண்டமாக வெளியான படம் அசுரன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்க டிஜே, அம்மு அபிராமி, கென் கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இப்படம் தற்போது தெலுங்குவில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்க மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணி நடிக்கிறார்.

கன்னடத்தில் மொழி மாற்றம் ஆகும் அசுரன்
கன்னடத்தில் மொழி மாற்றம் ஆகும் அசுரன்

இதனிடையே அசுரன் படத்தை கன்னடத்தில் ரீமிக்ஸ் செய்ய கலைப்புலி எஸ். தாணு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் தனுஷ் கதாபாத்திரத்தில் புனித் ராஜ்குமார் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் அசுரன் திரைப்படம் இன்னும் எத்தனை மொழிகளில் ரீமேக் ஆகும் என்று தெரியவில்லை.

துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட்!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். படத்தில் விக்கிரம் சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் மற்றும் ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நீண்ட கால படப்பிடிப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளதாக படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது துவங்கி இருப்பதாகவும் ஊரடங்கு முடிந்தவுடன் மீதமுள்ள படப்பிடிப்பையும் முடித்து படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த செய்தி அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dhruva Natchathiram – Official Teaser

Exit mobile version