இன்றைய சினிமா செய்திகள் 09-11-2019

இன்றைய சினிமா செய்திகள் 09-11-2019

தளபதி 64 படத்தில் இணைந்த பிரபல நடிகை!

பிகில் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு பாக்யராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில், தளபதி 64 படத்தில் நடிகை மற்றும் டிவி தொகுப்பாளினி ரம்யா நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. தளபதி 64 படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

Ramya-joins-Thalapathy64-movie-000

அசுரன் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ரேயா!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அசுரன்.

அசுரன் படத்தில் தனுஷ் விவசாயியாக நடித்திருப்பார். நிலம் கையகப்படுத்தும் பணக்கார திருட்டுக் கும்பலிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடும் ஒரு சாமானிய மனிதனாக தனுஷ் அசுரன் படத்தில் நடித்து இருப்பார் என்பதை விட வாழ்ந்திருப்பார் என்று கூறலாம்.

தமிழில் அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் 100 கோடி வசூல் செய்ததாக அசுரன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருந்தார். அசுரன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாகவும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்திற்கு ஸ்ரேயா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

asuran-000

பாலிவுட்டில் 5 ஹீரோக்களை இயக்கும் அட்லி!

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு பிகில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியது. கால்பந்து மையமாக வைத்து உருவான பிகில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பிகில் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்தும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிகில் இரண்டு வார முடிவில் சுமார் 240 கோடிகளை தாண்டி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அட்லி ஷாருக்கானை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போது, அட்லி பாலிவுட்டில் ஐந்து முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி இருப்பதாகவும் கதையை கேட்ட அவர்கள் கதை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் டெவலப் செய்து விட்டு வாங்க படம் பண்ணலாம் சொல்லிட்டாங்க. இதை வைத்து பார்க்கும்போது அட்லி தமிழ் சினிமாவை மட்டும் இல்லைங்க இந்தி சினிமாவில் கலக்கு கலக்கு கலக்குவார் போல.

atlee-srk-new-movie-000

வசூலில் முன்னிலையில் பிகில் ஆதாரத்துடன் வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்கள்!

பிகில் இந்த வருடம் மாபெரும் வசூல் செய்துள்ளதாக முதலில் அறிவித்த திரையரங்கம் ராம் முத்துராம். திருநெல்வேலியில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் விஜய் திரைப்படங்கள் அதிகம் வெளியிடும் திரையரங்களில் ஒன்று. குறிப்பாக, விஜய் ரசிகர்களுக்கு பிடித்த திரையரங்கம் இந்த ராம் முத்துராம் தான். இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் பிகில் தான் வசூலில் நம்பர் 1 என தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தனர்.

ram-muthuram-bigil-000

தற்போது, வெற்றி தியேட்டரில் இந்த வருடம் வெளியான படங்களில் பிகில் தான் வசூலில் நம்பர் 1 என்றும். பிகில் திரைப்படத்தை சுமார் 40,000 ரசிகர்கள் பார்த்துள்ளதாக ராகேஷ் கௌதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க சென்னையில் மற்றொரு திரையரங்கம் ராயபுரத்தில் அமைந்துள்ள ஐட்ரிம்ஸ் திரையரங்கில் பிகில் திரைப்படம் தங்கள் திரையரங்குகளில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

Exit mobile version