Today Tamil Cinema News 07-05-2020

Today Tamil Cinema News 07-05-2020
Today Tamil Cinema News 07-05-2020

அதர்வா பிறந்த நாளில் புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் முன்னணி நடிகராக விளங்கி வரும் அதர்வாவுக்கு இன்று பிறந்தநாள். இவரின் பிறந்தநாளை பிரபலங்கள் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலமாக வாழ்த்தி வருகின்றனர்.

இதனிடையே, ஆர். கண்ணன் இயக்கத்தில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அதர்வா. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில் இன்று அதர்வாவுக்கு பிறந்தநாள் என்பதால் படக்குழு அதர்வாவின் பிறந்தநாளை வாழ்த்தி ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

தற்போது இந்த போஸ்டரை அதர்வா ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

Thalli Pogathey

மாநகரம் கதாநாயகனுக்கு இன்று பிறந்தநாள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்த படம் மாநகரம். இத்திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.

அதன்பின்பே கார்த்தியை வைத்து கைதி மற்றும் தளபதி விஜய் வைத்து மாஸ்டர் என தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கி வருகிறார்.

Sundeep_Kishan
Sundeep_Kishan

அதேபோல சுந்தீப் கிஷன் மாநகரமே திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு மாயவன் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Sundeep_Kishan_Image
Sundeep_Kishan_Image
Sundeep_Kishan_Photo
Sundeep_Kishan_Photo
Sundeep_Kishan_Still
Sundeep_Kishan_Still

இந்நிலையில், சுந்தீப் கிஷனுக்கு இன்று பிறந்தநாள். இவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஏ1 எக்ஸ்பிரஸ் படக்குழுவினர் பிறந்தநாள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

தற்போது இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

a1_express
a1_express

டி ஆர் பி யில் இணைந்த தனுஷ் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் திரைப்படம் வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தொலைக்காட்சியில் போடும் பொழுது அதிக நபர்கள் பார்த்த திரைப்படமாக வருவது இயல்பே.

ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் எல்லாம் திரையரங்குகளில் வசூலில் பெரிய சாதனை செய்ய தவறிய இருந்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் பொழுது அதிக நபர்கள் பார்த்த திரைப்படமாக அமைந்துவிடுகிறது.

அந்தவகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான பட்டாசு திரைப்படம் வசூலில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் அத்திரைப்படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தை அதிக நபர்கள் பார்த்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி தனுஷ் நடித்த படங்களிலேயே தொலைக்காட்சியில் அதிக நபர்கள் பார்த்த திரைப்படம் என்ற பெருமையும் பட்டாசு பெற்றுள்ளது.

pattas
pattas

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திட்டம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

தமிழ் சினிமாவில் இப்போது கதாநாயகிகளுக்கு என்று கதையம்சம் கொண்ட படங்களை தற்போது வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக நயன்தாரா நடிப்பில் வெளியான அறம், மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை போன்ற படங்கள் எல்லாம் நடிகைகளின் மையமாக வைத்து வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் திகழ்ந்து வருகிறது.

அதே வரிசையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற படம் என்ற பெருமையும் பெற்றது மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு நாடகத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்த விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு திட்டம் 2 என்று பெயர் வைத்துள்ளார்கள். மினி ஸ்டுடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் சார்பாக தினேஷ் கண்ணன் மற்றும் வினோத்குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்திற்கு இசை சதீஷ் ரகுநந்தன். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகி வரும் திட்டம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Thittam_Irandu_First_Look
Thittam_Irandu_First_Look
Exit mobile version