இன்றைய சினிமா செய்திகள் (05-12-2019)

Today Tamil Cinema News 05-12-2019

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்!

ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து மூன்று படங்களையும் தனுஷை வைத்து ஹிட் கொடுத்த வெற்றிமாறன். தற்போது, தளபதி விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க தளபதியிடம் கதை சொல்லியிருக்கிறாராம்.

vettrimaran-00

கதையை கேட்ட விஜய் நிச்சயமாக பண்ணலாம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சொல்லி இருக்கிறாராம். வெற்றிமாறன், தளபதி விஜய் கூட்டணி உருவாகும் படம் எப்படி இருக்கும் என்று இப்போதே தளபதி விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

விஜய் படத்தை அதிக விலைக்கு வாங்கிய அமேசான் பிரைம் வீடியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை தளபதி விஜய் ரசிகர்கள் தளபதி 64 என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், தளபதி படத்தை அதிக விலை கொடுத்து டிஜிட்டல் உரிமையை அமேசன் பிரைம் தற்போது வாங்கியுள்ளது.

Exit mobile version