இன்றைய சினிமா செய்திகள் (04-12-2019)

Today Tamil Cinema News 04-12-2019

தர்பார் ஆடியோ வெளியாகும் தேதி!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து. தற்போது டப்பிங் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

darbar-000

இந்நிலையில், படத்தின் பாடல்கள் வருகின்ற சனிக்கிழமை 7- ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த செய்தியை லைகா புரோடக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே சும்மா கிளியே பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடிக்கும் நடிகர்களின் லிஸ்ட்!

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் டாக்டராக நடிக்கிறார். படத்தை சிவகார்த்திகேயனுடன், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. டாக்டர் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார்.

doctor-movie-cast-000

இந்நிலையில், படத்தில் பணியாற்றும் நடிகர்களின் விவரங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். யோகி பாபு மற்றும் வினை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது.

இருட்டு படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த அதிர்ச்சி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி இயக்கி நடிக்கும் படம் இருட்டு. சாய் தன்சிகா இருட்டு படத்தில் பேயாக நடித்து உள்ளார். முழுக்க முழுக்க திகில் உருவாகியுள்ள இருட்டு திரைப்படத்திற்கு தணிக்கை குழு படத்தைப் பார்த்துவிட்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தணிக்கை குழுவின் இந்த முடிவு படக்குழுவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Iruttu-From-Dec-6-000

இந்நிலையில், பிகில் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட Screen Scene நிறுவனம் இருட்டு படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

தளபதி விஜய் நடிக்க வந்த நாள் இன்று!

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் இன்று தான் தளபதி விஜய் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் பல தோல்விகளைக் கண்ட விஜய் அதன் பின்பு சுதாரித்து பல வெற்றி படங்களை கொடுத்தார். குறிப்பாக, காதலுக்கு மரியாதை, பூவேஉனக்காக, நினைத்தேன்வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும், குஷி என தொடர்ந்து காதல் படங்களை கொடுத்து தமிழக மக்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தார்.

vijay-000

அதன் பின்பு வெளியான படங்கள் தோல்வியடைந்தாலும் பின்னர் மீண்டும் சுதாரித்து கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வசூல் சக்கரவர்த்தியாக உயர்ந்தார்.

அதன் பின்பு வெளியான படங்கள் துப்பாக்கி, தெறி, மெர்சல், சர்க்கார் கடைசியாக வெளியான பிகில் அனைத்து படங்களுமே வசூல் ரீதியாகவும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாகவும் அமைந்தது.

இன்று தமிழ் திரை உலகின் நம்பர் 1 நடிகர் விஜய் என்பது மட்டுமின்றி இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்த வெற்றி அல்ல தனது உழைப்பின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை அதுமட்டுமின்றி தனது ரசிகர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கை இன்று தளபதி விஜய் இந்த உயரத்தில் உள்ளார்.

ரஜினி, சிறுத்தை சிவா படத்தில் இணைந்த மீனா!

முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்த நடிகர் ரஜினிகாந்த். பின்பு, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

meena-000

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா இணைகிறார். ஏற்கனவே, மீனா ரஜினிக்கு ஜோடியாக எஜமான், முத்து போன்ற வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version