Today Tamil Cinema News 03-03-2020

வலிமை படத்திற்காக கொல்கத்தாவுக்கு பறந்த அஜித்!

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கிறார். 65% படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில். படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு கொல்கத்தாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அஜித்துக்கு விபத்து ஏற்பட்டதால் சிறிது காலம் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

valimai

திரையுலகில் 15-ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமன்னா!

திரையுலகில் எந்தவித பின்புலமும் இல்லாமல் கதாநாயகியாக அறிமுகமாகி இன்றுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுக்க வெற்றி கதாநாயகியாக கலக்கி வருபவர் தமன்னா. பெங்காலி பெண்ணாக இருந்தாலும் தென்னிந்திய பெண்ணாகவே திரையுலகினர் கொண்டாடப்பட்டு வருகிறார் தமன்னா. இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியில் மட்டுமின்றி சிறந்த படமாகவும் அமைந்தது. தமன்னா நடிக்கும் வந்து இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு பெறுவதால் எங்கள் லைவ் சினிமா நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

tamannah

வரலாற்று படத்தில் ரெஜினா கசாண்ட்ரா!

‘திருப்பன் பொலிஸ்’ புகழ் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடிக்கும் படம் ‘சூர்பனகை’. படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இப்படத்தை ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழியை தயாரிக்கிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது அந்த போஸ்டரில் ரெஜினா கசாண்ட்ரா ஒரு ராணி பாணியில் உடையணிந்த ஒரு பிரமிக்க வைக்கும் பாரம்பரிய கெட்அப்பில், அதிகாரமளித்தல் கருப்பொருளைக் குறிக்கும் ஒரு தீவிர தோற்றத்துடன் உள்ளார்.

Soorpanagai

Exit mobile version