இன்றைய சினிமா செய்திகள் (01-12-2019)

Today Tamil Cinema News 01-12-2019

தம்பி வெளியாகும் தேதி!

தம்பி, அறிமுக இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்திக், ஜோதிகா நடித்து வரும் படம். தம்பி படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க அக்கா தம்பி சென்டிமென்ட் மையமாக வைத்து உருவாகியுள்ள தம்பி படம் வருகிற டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

தம்பி படத்தை தமிழகத்தில் வெளியிட எஸ். டி. சி. பிக்ச்சர் உரிமம் பெற்றுள்ளது. கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியாகிய கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைப்போல தம்பி படமும் கார்த்திக்கு மாபெரும் வெற்றியை கொடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Thambi-From-Dec20-000

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி ஹீரோவாகிறார்!

லெஜெண்ட் சரவணா ஸ்டோர் முதலாளி சரவணன் முதன்முறையாக திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இன்று நடைபெற்ற படத் துவக்க விழாவில் ஏ.வி.எம் சரவணன், இளைய திலகம் பிரபு, விவேக் அவர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்றனர்.

புதுமுக நடிகை கீர்த்திகா திவாரி சரவணன் அவர்களுடன் ஜோடி சேர உள்ளார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதற்கு முன்பு சரவணா ஸ்டோர் முதலாளி சரவணன் பல்வேறு விளம்பரங்களில் நடித்து புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்க உள்ளனர். இவர்கள் அஜித் அவர்கள் நடித்த உள்ளாசம் திரைப்படத்தை 1997 ஆம் ஆண்டு இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

EKsg6iJU0AExkdP

saravana-00

குயின் வெப் சீரியஸ் டிரைலர் வெளியாகும் தேதி!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது வெப் சீரியஸ், மற்றும் திரைப்படமாக தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். இதனிடையே, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்து வரும் குயின் வெப் சீரியஸ் டிரைலர் வருகிற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி வெளியாகிறது.

Exit mobile version