நிபந்தனைகளுடன் சினிமா படப்பிடிப்புகள் நடத்தலாம் மத்திய அரசு

திரைப்பட படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.

vijay-atlee
vijay-atlee

வழிகாட்டு நெறிமுறைகள்:

முக்கவசம் கட்டாயம்.நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும். எச்சில் துப்புவதற்கு தடை

ஆரோக்ய சேது செயலி பயன்படுத்தப்பட வேண்டும்.

தெர்மல் சோதனை செய்யப்பட வேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

6 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட வேண்டும்

தனிமனித இடைவெளியை பின்பற்ற இருக்கைகள் அமைக்க வேண்டும்

டிக்கெட் உள்ளிட்ட முறைகளை நேரடி தொடர்பு பரிவர்த்தனைக்கு பதிலாக ஆன்லைன் முறையை பின்பற்ற வேண்டும்

வேலை நடைபெறும் பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் இருந்தால் அவர்களை தற்காலிகமாக தனிமைப்படுத்த வேண்டும்

படபிடிப்பு தளம், ரெக்கார்டிங் ஸ்டுடியோ, படத்தொகுப்பு இடங்களில் 6 மீட்டர் இடைவெளி கட்டாயம்

குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு படபிடிப்பு நடத்த வேண்டும்

படபிடிப்பு தளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

வெளிப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகத்தின் உதவியை நாட வேண்டும்

கையுறை, முகக்கவசம், கவச உடை வசதிகள் இருக்க வேண்டும்.

Exit mobile version