தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி!

லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் தளபதி விஜய் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 31ம் தேதி வெளியாகிறது.

கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை வைத்து ஒரு ஆக்சன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடித்து வருகிறார். மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். தளபதி 64 படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

thalapathy-64-first-look-poster-00

இந்நிலையில், தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்ட தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை காண ஆவலுடன் இருக்கிறார்கள்.

Exit mobile version