இன்றைய சினிமா செய்திகள் 06-11-2019
ஐசரி கணேஷ் தயாரிப்பில் சூர்யா!
காப்பான் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சூர்யா கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த தகவலை தற்போது, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தை தயாரிப்பதாகவும், சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் உறுதி செய்துள்ளார். விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என கூறியுள்ளார்.
ஜடா படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது!
அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கும் படம் ஜடா. முழுக்க முழுக்க புட்பால் மையமாக வைத்து உருவாகியுள்ள ஜடா படத்தில் கதிர் புட்பால் வீரராக நடிக்கிறார்.
கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த பிகில் படத்தில் இவர் புட்பால் வீரராக நடித்திருப்பார். அதே போல இந்த படத்திலும் கதிர் புட்பால் வீரராக ஆக நடித்திருக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜடா படத்தை பார்த்த தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜடா படம் டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் கமல்ஹாசன்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர தயாராக உள்ளது. தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கிறார்.
தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். தர்பார் படத்தை லைக்கா புரொடக்ஷன் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை உலக நாயகன் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.
மிக மிக அவசரம் படத்தை பார்த்து பாராட்டிய அதிமுக அமைச்சர்!
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் மிக மிக அவசரம் திரைப்படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வர தயாராக உள்ளது. மிக மிக அவசரம் படத்தின் கதை ஒரு பெண் போலீஸ் தனது வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதே படத்தின் கதை.
மிக மிக அவசரம் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா நடித்துள்ளார். தற்போது, மிக மிக அவசரம் திரைப்படத்தை பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார்.