சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசரை மோகன்லால் வெளிட்டார்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியானது!

Soorarai-Pottru-00

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான என்.ஜி.கே, காப்பான், படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இவர் இசையில் சூர்யா ஒரு பாடல் பாடியுள்ளார்.

இதனிடையே, படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடை நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று சூர்யா ரசிகர்கள் காத்திருந்தநிலையில். தற்போது, மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று படத்தின் டீசரை வெளிட்டார்.

தற்போது அந்த டீசரை நாம் பார்ப்போம்……

Exit mobile version