பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் தனுஷ் நடித்த 3 படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி பின்னர் தனுஷ் அவர்களாலேயே கதாநாயகனாக வளர்ந்து இன்று தனுஷ் அவர்களைவிட மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் ஒரு நபர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்றே கூறலாம்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவர் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. முதலாவதாக டாக்டர் படத்தின் போஸ்டர் வெளியானது அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு இரண்டு கைகளில் ரத்தம் வழிய தெறி லுக்கில் இருக்கிறார். மற்றொரு படத்தின் போஸ்டர் ஆன அயலான் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சிவகார்த்திகேயன் படங்களின் அடுத்தடுத்த போஸ்டர்கள் இன்று வெளியாகி தமிழ் திரையுலகை கலக்கிய வருகிறது.

Ayalaan-Doctor
Ayalaan-Doctor
Exit mobile version