கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தளபதி விஜய், ஜெனிலியா நடிப்பில் உருவான திரைப்படம் சச்சின்.
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். இவர் பிரபல பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஆவார்.
சச்சின் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இத்திரைப்படத்தில் தளபதி விஜய் நடிப்பு அற்புதமாக இருக்கும்.
மேலும் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே இன்றுவரை விஜய் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
குறிப்பாக தளபதி விஜய் பாடியிருக்கும் ‘வாடி வாடி கை படாத சிடி’ என்ற பாடல் இன்றுவரை விஜய் ரசிகர்களால் முணுமுணுக்க படுகிறது.
இத்திரைப்படம் சந்திரமுகி மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களுக்கு போட்டியாக வெளியானது.
இதனால் மாபெரும் வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி திரைப்படமே.
இந்நிலையில், சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் தற்போது ஒரு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் அவர் சச்சின் திரைப்படம் மூலம் தான் நான் சினிமா உலகில் நுழைந்தேன். இன்றுவரை எனக்கு என்று ஒரு அடையாளம் உள்ளது என்றால் அது சச்சின் திரைப்படம் தான்.
மேலும் தளபதி விஜய் ஓகே சொன்னால் உடனே சச்சின் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நான் தயார் என்று அந்தப் பேட்டியில் ஜான் மகேந்திரன் கூறியுள்ளார்.