விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் ரஷ்மிகா மந்தண்ணா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம்,தேவதாஸ்,சரிலேரு நீகேவரு போன்ற படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஸ்பா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா?
விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்நிலையில், தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் தளபதி-65 படத்தில் கதாநாயகியாக நடிக்க ரஷ்மிகா மந்தண்ணா அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை இந்த செய்தி உண்மையானால் தளபதி விஜயுடன் முதல் முறையாக இணைகிறார் ரஷ்மிகா.

Exit mobile version