அஜித், விஜய், ரஜினி யார் அதிக டேக் வாங்குவார்கள் மனம் திறந்த முருகதாஸ்!

டேக் வாங்காமல் நடிப்பதில் தளபதி விஜய் தான் கெட்டிக்காரன் முருகதாஸ்

ar-murugadoss-jpg

 

அஜித், விஜய், ரஜினி யார் அதிக டேக் வாங்குவார்கள் மனம் திறந்த முருகதாஸ்
அஜித், விஜய், ரஜினி யார் அதிக டேக் வாங்குவார்கள் மனம் திறந்த முருகதாஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். அஜித்தை வைத்து தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் விஜயகாந்தின் ரமணா படம் மூலம் வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தவர் முருகதாஸ்.

பின்னர் சிறிது காலம் படம் இயக்காமல் இருந்த முருகதாஸ் சூர்யாவை வைத்து கஜினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார். பின்பு அதே படத்தை இந்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானை வைத்து இயக்கி இந்தியாவில் 100 கோடி வசூல் புரியும் இயக்குனராக அவதாரம் எடுத்தார் முருகதாஸ். அதன் பின்பு தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார், என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

இந்நிலையில், ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கியுள்ள முருகதாஸ் அந்த படத்தை பற்றிய புரமோஷனுக்கு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது நிருபர் நீங்கள் இயக்கிய நடிகர்களில் யார் அதிக டேக் வாங்கி நடித்து உள்ளனர் என்று கேட்டதற்கு. முருகதாஸ் ரஜினி, அஜித் பல டேக்குகள் வாங்கி தான் ஓகே செய்வார்கள். ஆனால், தளபதி விஜய் ஒரே டேக்கில் ஓகே செய்து விடுவார் என்று பளிச்சென்று பதில் கூறியுள்ளார் முருகதாஸ். முருகதாசின் இந்த பதிலைக் கேட்ட தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Exit mobile version