பொதுவாக ஒரு சில படங்களில் நடித்தாலே தங்களை பெரிய நடிகைகளாக நினைத்து. சில நடிகைகள் தங்களின் வரம்புமீறி உச்ச நட்சத்திரங்களை தொடர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் மூன்றாம் பாகத்தில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேறியவர் மீரா மிதுன்.
இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்யை ட்விட்டர் மூலம் சீண்டி உள்ளார்.
நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குரோனோ என்ற நோயால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு துன்பம் அடைந்து வரும் நிலையில் கன்னட நடிகரான ரஜினியும் கிறிஸ்தவரான விஜயும் தங்கள் வீட்டில் சொகுசாக நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறீர்கள்.
உங்களை உயர்த்திய மக்களை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்று மிகவும் ஆவேசமாக ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
மீரா மிதுன் இன் இந்த ட்விட்டர் பதிவை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள்.