விஜய் பிறந்தநாளில் மாஸ்டர் டிரைலர் : விஜய் டிவி தீனா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா நோயின் தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் வெளியாக தாமதமாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் கூலிங்கிளாஸ் மாட்டிக்கொண்டு அழகாக இருக்கும் விஜய்
மாஸ்டர் படத்தில் கூலிங்கிளாஸ் மாட்டிக்கொண்டு அழகாக இருக்கும் விஜய்

இந்நிலையில், தளபதி விஜயின் பிறந்த நாள் வருகின்ற ஜூன் மாதம் 22-ஆம் தேதி வரை இருப்பதால் அவரின் பிறந்த நாளன்று ஏதேனும் படத்தை பற்றிய தகவல் வெளியாகும் என்று பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி வந்தன.
ஆக்ரோஷமான முகபாவனையில் தளபதி விஜய்
ஆக்ரோஷமான முகபாவனையில் தளபதி விஜய்

தற்போது படத்தில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் தீனா தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் தரமான சம்பவம் ஒன்று ஜூன் 22-ஆம் தேதி அன்று நடக்கும் என்று ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இதை வைத்து பார்க்கும் பொழுது மாஸ்டர் படத்தின் டிரைலர் அல்லது டீசர் நிச்சயம் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது தீனாவின் இந்த ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Exit mobile version