ரசிகர்களை கவர்ந்த வாத்தி கம்மிங் சாங்!

vaathi-coming-song-video

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் இவர் படத்தில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் படத்தில் வாத்தி கம்மிங் சாங் என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. பாடல் வெளியான சிறிது நிமிடத்திலேயே மூன்று லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை செய்தது.

சுமார் 3 மணி நேர முடிவில் வாத்தி கம்மிங் சாங் சுமார் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்து வருகிறது. இந்த பாடலை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து யூடியூபில் பார்த்து வருவதால் பார்வையாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version