மாஸ்டர் செகண்ட் லுக் நாளை வெளியாகிறது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தில் தளபதி கல்லூரி பேராசிரியராக நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இதனிடையே, புத்தாண்டில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் நாளை மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நாளை பொங்கல் தினம் என்பதால் அன்று வெளியான ஆனால் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து அளித்தது போல் இருக்கும் என்று கருதி படக்குழு நாளை படத்தின் போஸ்டரை வெளியிடுகிறது.

master-second-look-000

Exit mobile version