அஜித் பட பாடல் வரியில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மாஸ்டர் தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாகவும் சரி வியாபார ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.

இவருக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கும் அளவிற்கு மிக பெரிய ரசிகர் மன்றம் இருக்கிறது.

இந்நிலையில், தளபதி விஜய்க்கு வருகின்ற ஜூன் மாதம் 22-ஆம் தேதி பிறந்த நாள் வருவதால் தற்போது இவரது பிறந்தநாளுக்கு அனைவரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

இதனிடையே, தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்து இருக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அரசர் போல் அமர்ந்திருக்கும் தளபதி விஜய்
அரசர் போல் அமர்ந்திருக்கும் தளபதி விஜய்

அந்த புகைப்படத்தில் விஜய் இன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்தாள் விஜயின் சிலையை மற்ற விஜய் செதுக்கி வருவதுபோல் இடம்பெற்றுள்ளது.

இதை வைத்து பார்க்கும் பொழுது அஜித்குமார் படத்தில் வரும் பாடல் வரியான தன்னை தானே செதுக்கியவன் இவன் என்று இடம்பெறும் அந்த பாடல் வரியை போல இந்த புகைப்படம் இருக்கிறது.

இதை கண்ட அஜித் ரசிகர்கள் விஜய்யை புகழ கூட தல பாடல் தான் தேவைப்படுகிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தன்னைத்தானே செதுக்கி உயர்ந்த தளபதி விஜய்
தன்னைத்தானே செதுக்கி உயர்ந்த தளபதி விஜய்

Exit mobile version