“ஈஸ்வரன்” அவதாரம் எடுக்கும் சிலம்பரசன்

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயருடன் தமிழ் திரை உலகிற்கு குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் சிலம்பரசன். ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிலம்பரசன் பின்பு தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான “காதல் அழிவதில்லை” என்ற படத்தின் மூலமாக கதாநாயகராக உருவெடுத்தார்.

அதன்பின்பு அவர் நடிப்பில் வெளியான டம் “தம்” “குத்து” “தொட்டி ஜெயா” போன்ற படங்கள் வெற்றி மற்றும் தோல்விகளை கொடுத்து வந்தது.

பின்பு ஹரி இயக்கத்தில் உருவான “கோவில்” என்ற படத்தின் மூலமாகத்தான் சிலம்பரசன் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்தார்.

Eeswaran first look poster
Eeswaran first look poster

அதன்பின்பு சிலம்பரசன் முதல்முறையாக இயக்கி நடித்த “மன்மதன்” என்ற திரைப்படம் சிலம்பரசனை வெற்றி நடிகனாக மாற்றியது.

அதன் பின்பு ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான “விண்ணை தாண்டி வருவாயா” என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நட்சத்திரமாக உருவெடுத்தார் சிலம்பரசன்.

அதன் பின்பு சில படங்களில் சரியாக கால்ஷீட் கொடுக்காததால் படங்கள் அனைத்தும் துவங்கி பின்பு தாமதமாகி வெளியானது. குறிப்பாக, “வாலு” என்ற படம் வெளியாக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலானது. அப்போது தளபதி விஜய் தலையிட்டு படம் வெளியாக பெரிதும் உதவினார்.

இதனிடையே கடைசியாக வெளியான சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “வந்தா ராஜாவா தான் வருவேன்” என்ற திரைப்படம் பெரும் தோல்வி திரைப்படமாக சிலம்பரசனுக்கு அமைந்தது.

அதன் பின்பு தனது உடல் எடையை குறைக்க சிலம்பரசன் வெளிநாட்டுக்கு சென்று பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது எடையை கணிசமாக குறைத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே இன்று விஜயதசமி தினத்தை முன்னிட்டு நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய திரைப்படமான “ஈஸ்வரன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தை பல வெற்றிப்படங்களை கொடுத்த சுசீந்திரன் இயக்குகிறார். “ஒஸ்தி” படத்திற்கு இசையமைத்த எஸ். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் “ஈஸ்வரன்” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எதுவாக இருந்தாலும் சரி இந்த திரைப்படம் ஆவது சிலம்பரசன் அவர்களுக்கு நல்ல முறையில் படப்பிடிப்புகள் அனைத்தும் நடைபெற்று படம் வெளியாக நாங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

Eeswaran Official Motion Poster

 

Exit mobile version