தாய்மாமன் கடமையை செய்த தனுஷ்!

பொதுவாக நடிகர்கள் தங்களின் குடும்பத்துடன் செலவு செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது குறிப்பாக வடசென்னை, அசுரன் மற்றும் பட்டாசு என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போது கர்ணன் மற்றும் ஒரு இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது சகோதரி மகனுக்கு காதுகுத்து திருவிழா திருப்பதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஒரு தாய் மாமனாக தனது கடமையை செய்து உள்ளார் நடிகர் தனுஷ். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது.

dhanush

Exit mobile version