Devi Sri Prasad revealed Vijay’s favourite song | விஜய்க்குப் பிடித்த பாடல் இதுதான் – தேவி ஸ்ரீ பிரசாத்

தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் என் பாடல்தான் அவரே சொன்னார் தேவி ஸ்ரீ பிரசாத்

தமிழ் சினிமாவின் விநியோகஸ்தர்களுக்கு விஷ்ணு. தயாரிப்பாளர்களுக்கு வசூல் சக்கரவர்த்தி. ரசிகர்களுக்கு தளபதி என்று பெருமையாக அழைக்கப்படும் விஜய் அவர்களுக்கு நேற்று (22-6-2020)பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தளபதி விஜய்யின் பிறந்தநாளை பல சினிமா பிரபலங்கள் வெவ்வேறு விதமாக வாழ்த்து சொல்லி வருகிறார்கள். அந்த வகையில், தளபதி விஜயின் சச்சின், திருப்பாச்சி, வில்லு போன்ற படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் தேவி ஸ்ரீபிரசாத். இவர் இசையில் தளபதி விஜயின் படங்களின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் பாடல்கள் அமைந்துள்ளது.

தளபதி விஜய் உடன் தேவிஸ்ரீபிரசாத்
தளபதி விஜய் உடன் தேவிஸ்ரீபிரசாத்

இதனிடையே, தேவி ஸ்ரீ பிரசாத் நேற்று ஒரு வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தளபதி விஜய் எனக்கு பிடித்த பாடல் சச்சின் படத்தில் இடம்பெற்ற ‘கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல’ என்ற பாடல்தான் எனக்கு பிடித்தமான பாடல் என்றும் இதுவரை இந்த பாடலுக்கு ஈடு இணையாக எந்த பாடலும் இல்லை என்றும் விஜய் தேவி ஸ்ரீ பிரசாத்தை பார்த்து கூறுவது போல அந்த வீடியோ உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளுக்கு இந்த வீடியோவை வெளியிட்டு என் பாடல்தான் தளபதி விஜய்க்கு பிடிக்கும் என்று தேவிஸ்ரீபிரசாத் பெருமையாக சொல்லி வருகிறார்.

அந்த வீடியோவில் நாம் பார்ப்போம்…

Exit mobile version