Big update?: Thalapathy 64

Thalapathy64 Upadte

விஜய் நடிக்கும் தளபதி 64 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தற்போது உள்ள நிலையில் விஜய் போன்ற சூப்பர் ஸ்டார் உடன் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இருப்பினும் அவர் திரைப்படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டும் நடிகர் என்பதால் அவரின் இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கவில்லை.

தளபதி 64 விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.

திரைப் படங்களில் ஹீரோ கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதே போன்று தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு உள்ளது.

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் சரிசமமான வில்லன் கேரக்டர்கள் தான் படத்தின் வெற்றிக்கு அச்சாணியாக அமைந்துள்ளனர்.

ஆக, தளபதி 64 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்க்கு சரிசமமான வில்லனை காட்ட விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.

Exit mobile version