தென்னிந்திய மார்க்கெட்டை கைப்பற்றத் துடிக்கும் AMAZON, சத்தமில்லாமல் காய் நகர்த்தும் NETFLIX 🤼‍♂️

தென்னிந்திய மார்க்கெட்டை கைப்பற்றத் துடிக்கும் AMAZON, சத்தமில்லாமல் காய் நகர்த்தும் NETFLIX
netflix vs amazon

தென்னிந்திய மார்க்கெட்டை கைப்பற்றத் துடிக்கும் AMAZON, சத்தமில்லாமல் காய் நகர்த்தும் NETFLIX 

திரைப்படங்களை OTT பிளாட்பார்மில் வெளியிடுவதற்கு Amazon மற்றும் Netflix இடையே மிகப் பெரும் போட்டி எழுந்துள்ளது.

அமேசான் பிரைம் இந்தியாவின் மிகப்பெரிய OTT தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றிருக்கிறது. முதலிடத்தில் Hotstar நிறுவனம் கோலோச்சுகிறது.

Amazon நிறுவனம் முதலிடம் பிடிக்க மிகப் பெரும் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ள இந்த சூழ்நிலையை OTT நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு உள்ள வேலையில், Amazon நேரடியாக திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு தனது தளத்தில் வெளியிட பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

தற்போது வரை ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் படங்களை வெளியிட்டு உள்ளது. மேலும் ஏழு படங்களை வெளியிட தயாராக உள்ளது.

இதற்காக அமேசான் நிறுவனம் அதிக முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு விளம்பரங்களை கொடுத்தும் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டவில்லை.

இந்நிலையில் மற்றுமொரு OTT தளமான NETFLIX சத்தம் இல்லாமல் தனது முதல் திரைப்படத்தை வெளியிட்டு அதில் மிகப்பெரும் வருவாயையும், சந்தாதாரர்கள் பெற்றுள்ளது.

நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியான முதல் தெலுங்கு திரைப்படமான கிருஷ்ணாவும் அவரின் லீலையும் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அமேசான் போல் அல்லாமல் விளம்பரம் இல்லாமலேயே இந்த வெற்றியை நெட்ப்ளிக்ஸ் அடைந்துள்ளது.

இதற்கு முன்பு நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் மாதச் சந்தா 599 க்கு அளித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்திய பயனாளர்களை கருத்தில் கொண்டு தனது மாத சந்தாவை 199 ரூபாய்க்கு, வெறும் மொபைல் வழியாக காண ஏற்பாடு செய்தது.

இதற்கு காரணம் உலகம் முழுவதும் மொபைல் வழியாக OTT பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது காரணம்.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய வாய்ப்பை இந்த இரண்டு நிறுவனங்களும் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

Exit mobile version