இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட் வீடியோ

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட் வீடியோ

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. குணச்சித்திரம் வில்லன், ஹீரோ என தொடர்ந்து தனது பணியை திரையுலகிற்கு அர்ப்பணித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இவரது படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற எடுக்கப்பட்ட படங்களாக இருக்காது முழுக்க முழுக்க கதையம்சம் கொண்ட படங்களாகவே இருக்கும். தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், மனிதன் என்ற பெயரில் புதிய போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இதற்கான வீடியோ ஒன்றை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

Exit mobile version