விஜய் பிறந்தநாளுக்கு காமன்மேன் டிபி வெளியிட்ட ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி ரசிகர்கள் அன்பாக அழைக்கும் தளபதி, ரசிகைகள் அன்பாக அழைக்கும் அண்ணன் என தொடர்ந்து பல பெயர்களுடன் இருக்கும் ஒரே நடிகர் என்றால் அது நம் அன்பு தளபதி தளபதி விஜய் என்றே சொல்லலாம்.
இவர் நடித்த படத்தை பார்க்க திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக வந்து படம் பார்க்கும் அளவிற்கு இவருக்கு என்று தனியாக பேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இவர் திரையில் நடனமாடினாள் இவர் நடனத்தை பின் தொடர்ந்து ஆடும் பல குழந்தைகளும் இன்னும் இருக்கிறார்கள்.
இப்படி பல நெஞ்சங்களை கொள்ளை கொண்ட தளபதி விஜய் அவர்களுக்கு வருகின்ற ஜூன் 22-ஆம் தேதி பிறந்த நாள் என்பதால் இவரது ரசிகர்களில் தற்போதைய கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், இணையதளங்களில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் காமன்மேன் டிபி ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படத்தை வெளியிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே சுமார் இரண்டு மில்லியன் ரீட்வீட் செய்து ட்விட்டரை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்!
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் படம் எஃப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷால் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார்.
படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் எஃப்.ஐ.ஆர் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா மற்றும் பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். படத்தை மிக பிரமாண்டமாக விஷ்ணு விஷால் தயாரிக்கிறார். படம் தீபாவளி வெளியீடாக வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனக்கு இந்த உணவு தான் ரொம்ப பிடிக்கும் : கேத்தரின் ட்ரேசா!
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் மெட்ராஸ். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கேத்ரின் தெரேசா.
இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஷாலுக்கு ஜோடியாக கதகளி, விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கதாநாயகன் மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருபவர் கேத்ரின் தெரேசா.
இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு காலம் நடைபெற்று வருவதால் நட்சத்திரங்கள் அனைவருமே வீட்டிலேயே இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு பிடித்த உணவுகளை அவர்களே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கேத்தரின் தெரசா தனக்கு மிகவும் பிடித்த உணவு சாலட் அதை தினமும் சாப்பிட்டால் போதும் எனக்கு நிம்மதியாக இருக்கும் என்று புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கேத்ரின் தெரசாவுக்கு வாழ்த்தி மற்றும் புகழ்ந்து வருகிறார்கள்.