ரம்யா பாண்டியன் தொடர்ந்து சேலையில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்!
தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 விழாவில் கலந்து கொள்ள வந்த கீர்த்தி பாண்டியன் மிகவும் அழகான சேலையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்தினம் படத்தின் டீசரை வெளியிடும் தனுஷ்!
தமிழ் சினிமாவில் புது புது கதை அம்சங்களைக் கொண்ட படங்களை இயக்கி தயாரித்து வரும் மணிரத்னம் தற்போது வானம் கொட்டட்டும் என்ற படத்தை தயாரிக்கிறார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா செபாஸ்டியன் என முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
படத்தை அறிமுக இயக்குனர் தனா இயக்குகிறார். இந்நிலையில், வானம் கொட்டட்டும் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.
சைக்கோ டிரைலர் நாளை வெளியாகிறது!
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் சைக்கோ. தலைப்புக்கு ஏற்ற போல் படத்தின் டீசர் ஏற்கனவே சைக்கோ போல் தான் இருந்தது. படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைடாரி, நித்யா மேனன் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 12 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.
ஸ்ருஷ்தி டாங்கே-வின் ஹாட் புகைப்படங்கள்!
டார்லிங் எனக்குள் ஒருவன் தர்மதுரை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ருஷ்தி டாங்கே. தற்போது, சேரனுக்கு ஜோடியாக ராஜாவுக்கு செக் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஸ்ருஷ்தி டாங்கே. தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.