Today Tamil Cinema News 20-12-2019
பட்டாசு படத்தின் இரண்டாவது பாடல் முரட்டுத் தமிழன் நாளை வெளியாகிறது!
அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாசு படத்தில் நடித்து வருகிறார். அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் மெஹ்ரீன் கவுர் பிர்சாடா நடிக்கிறார்கள்.
இதனிடையே, பட்டாசு படத்தின் முதல் பாடல் Chill Bro ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, இப்படத்தின் இரண்டாவது பாடல் முரட்டுத் தமிழன் என்ற பாடல் நாளை வெளியாகிறது. இந்த தகவலை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு உள்ளார்கள். பொங்கல் வெளியீடாக வருகின்ற ஜனவரி மாதம் 16ம் தேதி பட்டாசு உலகம் முழுவதும் வெளியாகிறது.
தளபதி 64 படத்தில் இணைந்த ரமேஷ் திலக்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது தளபதி 64 படப்பிடிப்பில் கர்நாடகாவில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூது கவ்வும், டிமான்ட்டி காலனி, ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரமேஷ் திலக். இவர் தற்போது, தளபதி 64ல் இணைந்துள்ளார். இந்த செய்தியை ரமேஷ் திலக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு அதிக லைக்குகள் பெற்ற ட்ரெய்லர் என்ற பெருமையை பெரும் பிகில்!
ஒரு படம் வெற்றி பெறுவதற்கு டிரைலர் மிக மிக முக்கியம். அதுவும் தற்போது, உள்ள சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தின் டிரைலரே படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக லைக்குகள் பெற்ற ட்ரெய்லர் என்ற பெருமையை விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் பெற்றுள்ளது. பிகில் டிரைலரை அதிக நபர்கள் லைக் செய்த டிரெய்லர் என யூ டியூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.