Today Tamil Cinema News 22-11-2019
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள்!
பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் தனது படங்களுக்கு இனி திரையரங்கில் பேனர் வைக்க கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார். இந்த உத்தரவை ஏற்று தளபதி விஜய் ரசிகர்கள் பிகில் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் எந்த பேனர்களும் வைக்கவில்லை. அதற்கு, பதிலாக சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தற்போது, காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா மற்றும் நூலகம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ₨ 5 லட்சம் செலவில் சீர் அமைத்து தரப்படும் என்று கூறியுள்ளார்கள் விஜய் ரசிகர்களின் இந்த மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சரிலேரு நீகேவரு டீசர் வெளியாகியது!
அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ்பாபு ராணுவ அதிகாரியாக நடிக்கும் படம் சரிலேரு நீகேவரு. சரிலேரு நீகேவரு படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தண்ணா நடிக்கிறார். விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சரிலேரு நீகேவரு படத்தை மகேஷ் பாபு, தில் ராஜு இணைந்து தயாரிக்கிறார்கள். இந்நிலையில், சரிலேரு நீகேவரு படத்தின் டீசர் டீசர் இன்று வெளியாகியது. சரிலேரு நீகேவரு டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே அதை கலைகளையும் அதிக பார்வையாளர்கள் கவர்ந்துள்ளது.