10 Movies changed Vijay film Career | விஜயின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட பத்து படங்கள்

10 movies changed vijay film career

நாளைய தீர்ப்பு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் தளபதி விஜய். பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் மகன் என்ற பிம்பத்தில் எளிதாக திரையுலகில் நுழைந்தாலும் பின் நீடித்து நிலைக்க தளபதி விஜய் மேற்கொண்ட உழைப்புக்கு ஈடு இணை கிடையாது.

ஆம், தளபதி விஜய் நடித்த முதல் படத்திற்கு பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தது குறிப்பாக இந்த முகத்திற்கு எதுக்கு காசு கொடுத்து திரையரங்கில் போய் படம் பார்க்க வேண்டுமென்று பேசும் அளவுக்கு பல நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின ஆனால் தளபதி இதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் தனது அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றி நடிகரானார். இக்கட்டுரையில் தளபதி விஜய் திரைப்பயணத்தில் நீங்காத இடம் பெற்ற 10 வெற்றி படங்களை பற்றி நாம் பார்க்க இருக்கிறோம்.

1. பூவே உனக்காக

ஆர்.பி. சவுத்ரி தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிப்ரவரி 15-ஆம் தேதி 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூவே உனக்காக. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சங்கீதா நடித்திருப்பார். முக்கிய கதாபாத்திரத்தில் நாகேஷ், நம்பியார் என மிகப் பிரபலமான பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

படத்தின் கதை என்னவென்றால் தளபதி விஜய் தான் காதலித்த காதலி வேறு ஒருவரை காதலிக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரையும் அவரது குடும்பத்தையும் இணைப்பதற்காக தளபதி எடுக்கும் முயற்சியை படத்தின் கதை.

பூவே உனக்காக படத்தில் விஜய் சங்கீதா
பூவே உனக்காக படத்தில் விஜய் சங்கீதா

அக்காலகட்டத்தில் இப்படத்தின் வெற்றிக்கு கதை மட்டுமின்றி படத்தின் பாடல்களும் மிக முக்கிய பங்கு வகித்தது. எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் ஆனந்தம் ஆனந்தம் பாடும் என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடலாக இருக்கிறது. பூவே உனக்காக தளபதி விஜய்க்கு மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

2. காதலுக்கு மரியாதை

சங்கிலி முருகன் தயாரிப்பில் ஃபாசில் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி 1997 இல் வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை.

படத்தின் கதை என்னவென்றால் தளபதி விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். ஷாலினி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் வேறு வேறு மதத்தை சேர்ந்த இருவர் எவ்வாறு தங்கள் வீட்டில் சொல்லி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் விஜயுடன் ஷாலினி
காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் விஜயுடன் ஷாலினி

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, சிவகுமார், வித்தியா, விஜய்க்கு நண்பர்களாக சார்லி மற்றும் தாமு நடித்திருப்பார்கள்.

இளையராஜா இசையில் ‘என்னை தாலாட்ட வருவாளா’ என்ற பாடல் அக்காலகட்டத்தில் அனைத்து தரப்பு காதலர்களுக்கும் பிடித்த பாடலாக இருந்தது. காதலுக்கு மரியாதை சுமார் 375 நாட்கள் ஓடி தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் நீங்காத ஒரு வெற்றியை கொடுத்த திரைப்படமாக அமைந்தது.

3. குஷி

ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய் ஜோதிகா நடிப்பில் மே 19-ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் குஷி.

தலைப்புக்கு ஏற்றவாறு குஷி திரைப்படம் படம் முழுக்க சந்தோஷம் நிறைந்த திரைப்படமாக இருக்கும். படத்தில் தளபதி விஜய்யும் ஜோதிகாவும் ஒருவர் மாற்றி ஒருவர் சண்டையிடுவதை படம் முழுக்க அதை வைத்தே கதையாக அமைத்திருப்பார் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா.

குஷி திரைப்படத்தில் விஜய் ஜோதிகா பைக்கில் அமர்ந்திருக்கும் காட்சி
குஷி திரைப்படத்தில் விஜய் ஜோதிகா பைக்கில் அமர்ந்திருக்கும் காட்சி

தேனிசைத் தென்றல் தேவா இசையில் ‘ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்’ ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ போன்ற பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரசிக்கும்படியாக இருந்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக தான் மிடில் கிளாஸ்லிருந்து ஹை கிளாஸ் ரசிகர்களை கைப்பற்றினார் தளபதி விஜய்.

4. திருமலை

கவிதாலயா தயாரிப்பில் ரமணா இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் திருமலை.

திருமலை படத்தில் விஜய்
திருமலை படத்தில் விஜய்

படத்தில் தளபதி விஜய் பைக் மெக்கானிக் ஆக நடித்திருப்பார். தளபதிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் தான் தளபதி விஜய் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக வாழ்க்கை ஒரு வட்டம் அதில் தோற்றவன் ஜெயிப்பான் ஜெயிக்கிறவன் தோற்பான் என்ற வசனம் மிக பிரபலமானது.

மேலும் படத்தில் தளபதி விஜய் தனது சட்டையின் காலர்லிருந்து சிகரெட் எடுக்கும் முறை பல ரசிகர்கள் ரசிகர்கள் பின்பற்றினார்கள்.

திருமலை படத்தில் விஜயின் அசத்தலான புகைப்படம்
திருமலை படத்தில் விஜயின் அசத்தலான புகைப்படம்

திருமலை திரைப்படத்திற்கு போட்டியாக வெளியான அஜித்குமாரின் ஆஞ்சநேயா மற்றும் விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் ஆகிய படங்களை விட திருமலை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

5. கில்லி

தளபதி விஜய்க்கு இன்று வரை இப்படி ஒரு திரைப்படம் வரவில்லை என்று சொல்லுமளவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம் என்றால் அது கில்லி என்றே கூறலாம்.

தரணி இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. படத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் ஆக்ரோஷமாக நடித்திருப்பார். படத்தில் தளபதி விஜய் கபடி வீரராக நடித்திருப்பார்.

ஒரு கட்டத்தில் கபாடியா இல்லை தன்னை நம்பி வந்த த்ரிஷா என்று முடிவெடுத்து திரிஷாவை காப்பாற்றும் விதம் படத்தின் ஹைலைட்.

வித்யாசாகர் இசையில் ‘அப்படி போடு’ பாடல் மிகவும் பிரபலமான பாடலாக இத்திரைப்படத்தில் இருந்தது. இப்படத்தில் தளபதி விஜய்யும் தங்கையாக நடித்திருக்கும் கதாபாத்திரமும் அவ்வப்போது நடக்கும் காமெடி காட்சிகள் படத்திற்கு மேலும் பலம் கூட்டும் வகையில் இருக்கும்.

கில்லி படத்தில் திரிஷா விஜய்
கில்லி படத்தில் திரிஷா விஜய்

குறிப்பாக இந்த திரைப்படத்தின் மூலமாக தான் விஜய் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

கில்லி திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது. திரைப்படம் தேவி திரையரங்கில் சுமார் 200 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

6. திருப்பாச்சி

தரணியின் உதவி இயக்குனர் பேரரசு இயக்கத்தில் அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் உடன் உருவான திரைப்படம் திருப்பாச்சி. தளபதி விஜய் ஒரு கிராமத்து இளைஞனாக நடித்திருப்பார். தங்கச்சி சென்னையில் ரவுடிகளால் படும் கஷ்டங்களை கண்ட விஜய் அவர்களை அழித்து தங்கச்சியை நிம்மதியாக வாழ வைப்பதே படத்தின் கதை.

திருப்பாச்சி படத்தில் விஜய்
திருப்பாச்சி படத்தில் விஜய்

திருப்பாச்சி படத்தில் சென்னையை சேர்ந்த மூன்று பிரபல ரவுடிகளை பற்றிய கதையாக எடுத்திருப்பதாக அக்காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. தினா இசையில் ‘கும்பிட போன தெய்வம்’ ‘நீ எந்த ஊரு நான் எந்த ஊரு’ பாடல் மிகவும் பிரபலமானது. திருப்பாச்சி விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையும் பெற்றது.

7. போக்கிரி

பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம் போக்கிரி.

படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருப்பார். படத்தின் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். ஆதி படத்திற்கு பின் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு வெளியான திரைப்படம் போக்கிரி நிச்சயம் இத்திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று அக்காலகட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள் வேண்டிக்கொண்ட ஒரு திரைப்படம் என்று சொல்லலாம்.

போக்கிரி படத்தில் விஜய்
போக்கிரி படத்தில் விஜய்

ஆதி திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் தளபதி விஜய் ஒரு வருடமாக எந்த திரைப்படம் நடிக்காமல் இருந்த நிலையில் வெளியான திரைப்படம் தான் போக்கிரி. மணிசர்மா இசையில் போக்கிரி படத்தில் அனைத்து பாடல்களுமே சிறப்பாக இருக்கும் குறிப்பாக ‘ஆடுங்கடா என்ன சுத்தி அய்யனாரு வெட்டுக்கத்தி’ பாடல் தளபதி விஜயின் தலைசிறந்த ஓபனிங் சாங்காக இன்றுவரை இருக்கிறது.

போக்கிரி படத்தில் விஜய்
போக்கிரி படத்தில் விஜய்

மேலும் இப்படத்தில் தளபதி விஜய் பேசும் வசனமான நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்ற வசனம் மிகவும் பிரபலமானது. போக்கிரி திரைப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி திரையரங்கில் 200 நாட்கள் ஓடியது.

மேலும் ரஜினியின் சந்திரமுகி படத்தின் மொத்த வசூலையும் போக்கிரி முறியடித்தது என்பது அக்காலகட்டத்தின் வரலாறு.

8. துப்பாக்கி

ஏ.ஆர். முருகதாஸ், தளபதி விஜய் முதல்முறையாக இணைந்த திரைப்படம் துப்பாக்கி. தளபதி விஜய் ராணுவ வீரராக மிகவும் கம்பீரமாக நடித்திருப்பார். துப்பாக்கி படத்தின் அறிமுக போஸ்டர் வெளியாகும் போதே படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது. கூடவே எதிர்ப்பும் அதிகமானது.

சிகரெட் பிடிக்கும் விஜய்
சிகரெட் பிடிக்கும் விஜய்

அறிமுக போஸ்டரில் தளபதி விஜய் புகைப்பிடிக்கும் காட்சி அமைந்திருக்கும் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறக்கூடாது என்று அப்போதே பல அரசியல்வாதிகள் போர்க்கொடி தூக்கினார். உடனே முருகதாஸ் தலையிட்டு படத்தில் புகைபிடிக்கும் காட்சி இருக்காது என்று தெளிவுபடுத்தினார். பின்பு படம் தீபாவளிக்கு வெளியானது.

படத்தின் கதை என்னவென்றால் மும்பையை அளிக்க தீவிரவாத கும்பல் முடிவு செய்கிறது. அதன்படி 12 இடங்களில் குண்டுகள் வைக்கப்படுகிறது. அந்த குண்டுகள் வெடித்ததால் தளபதி விஜய் மும்பை மக்களை காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் கதை.

துப்பாக்கி படத்தில் விஜய்
துப்பாக்கி படத்தில் விஜய்

இப்படத்தில் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் அதிகம் இருப்பதாக படம் வெளியான மூன்றாவது நாளிலிருந்து முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கினார். பின்பு அவர்கள் சொன்ன காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது அப்படி இருந்தும் துப்பாக்கி திரைப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து தளபதி விஜயின் முதல் 100 கோடி படம் என்ற பெருமையையும் துப்பாக்கி பெற்றது.

படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருப்பார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘கூகுள் கூகுள்’ பாடல் படத்தில் இடம்பெற்ற பாடல்களிலேயே பிரபலமான பாடல். மேலும் பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் விளையாடியிருப்பார் என்றே கூறலாம்.

துப்பாக்கி படத்தில் விஜய் காஜல் அகர்வால்
துப்பாக்கி படத்தில் விஜய் காஜல் அகர்வால்

மேலும் படத்தின் முதல் பாதி இறுதியில் தளபதி விஜய் வில்லனிடம் ஐ அம் வெயிட்டிங் என்ற வசனம் இன்று வரை பல படங்களில் பல நடிகர்களால் சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த வசனம் பிரபலமானது. துப்பாக்கி திரைப்படம் விஜய் மற்றும் முருகதாஸ் மீண்டும் மீண்டும் இணைய காரணமாக அமைந்த திரைப்படம்.

9. கத்தி

விவசாயிகளின் தற்போதைய நிலையை வெட்டவெளிச்சமாக எடுத்துக் காட்டிய திரைப்படம் கத்தி.

தளபதி விஜய்யும் A.R. முருகதாஸும் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம். படத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்து தொழிற்சாலைகளை கட்டுவது இப்படத்தின் கதை. தளபதி விஜய் கார்ப்பரேட் கம்பெனிகளே எதிர்த்து ஏழை விவசாயிகளுக்கு மீண்டும் நிலத்தை திருப்பி தர போராடும் ஒரு சாமானிய மனிதராக நடித்திருப்பார்.

கத்தி படத்தின் மோஷன் போஸ்டர்

இரட்டை வேடங்களில் தளபதி விஜய் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் என்ற பெருமையும் கத்தி படத்தையே சாரும். அதுவரை இரட்டைவேடங்களில் தளபதி விஜய் நடித்த படங்கள் அதுவுமே எதுவும் சரியாக போகவில்லை என்றே கூறலாம். அந்த கோட்பாட்டை கத்தி திரைப்படம் மாற்றியமைத்தது.

மேலும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இத்திரைப்படம் வெளியாக பல எதிர்ப்புகள் கிளம்பின குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் இலங்கையை சேர்ந்தவர் இவர் இலங்கையிலுள்ள இந்தியர்களுக்கு எதிராக செயல்படுகிறார் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

கத்தி படத்தில் விஜய் சமந்தா
கத்தி படத்தில் விஜய் சமந்தா

ஆனால் இவையெல்லாம் ஓரம்கட்டி கத்தி திரைப்படம் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. கத்தி திரைப்படத்தில் தளபதி விஜய் ஜீவானந்தம் மற்றும் கதிரேசன் என இரண்டு கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியான நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தி இருப்பார்.

கத்தி படத்தில் விஜய்
கத்தி படத்தில் விஜய்

அனிருத் இசையில் ‘செல்பிபுள்ள’ பாடல் மெகா ஹிட் பாடலாக அக்காலகட்டத்தில் அறியப்பட்டது. மேலும் படத்தில் பின்னணி இசை அனிருத் பட்டைய கிளப்பி இருப்பார் என்றே கூறலாம். கத்தி படத்தின் தீம் மியூசிக் இன்னும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது அதற்கு அனிருத் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அக்காலகட்டத்தில் தளபதி விஜய்க்கு விவசாயிகளின் நடிகன் என்ற பெயரும் கிடைத்தது.

10. மெர்சல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் இன் நூறாவது திரைப்படம் மெர்சல். படத்தில் விஜய் அப்பா இரண்டு மகன்கள் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருப்பார்கள். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ஏஆர் ரகுமான் இசையில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் சென்று தமிழர்களுக்கான பாடலாக இன்றுவரை தென்பட்டு வருகிறது.

மெர்சல் படத்தில் விஜய்
மெர்சல் படத்தில் விஜய்

படத்தின் வில்லனாக நடிகர் மற்றும் இயக்குனர் S.J. சூர்யா நடித்திருப்பார். படத்தின் கதை என்னவென்றால் மருத்துவத் துறையில் ஏற்படும் குளறுபடிகளை வெளிப்படுத்தும் இளைஞனாக தளபதிவிஜய் நடித்திருப்பார்

மெர்சல் படத்தில் விஜய்
மெர்சல் படத்தில் விஜய்

மேலும் படத்தில் இடம்பெறும் வசனங்கள் மத்திய அரசை எதிர்க்கும் வகையில் இருப்பதாக அக்காலகட்டத்தில் ஆளும் கட்சியால் எதிர்க்கப்பட்ட திரைப்படம் மெர்சல். விஜய், அட்லி கூட்டணியில் மற்றொரு வெற்றியாக மெர்சல் படம் அறியப்பட்டது.

Exit mobile version