சூர்யா தேவி கைது – வனிதாவை திட்டி வீடியோ பதிவு ஏற்றியதால் நடவடிக்கை

சூர்யா தேவி கைது – வனிதாவை திட்டி வீடியோ பதிவு ஏற்றியதால் நடவடிக்கை

சூர்யா தேவி கைது: வனிதாவை திட்டி தொடர்ந்து வீடியோ பதிவு ஏற்றியதால் காவல்துறை நடவடிக்கை

நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு YouTube சேனலை ஒன்று தொடங்கி சமையல் தொடர்பான தனது வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் இயக்குனர், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியிட்டிருந்தார்.

மேலும் அவர்களின் திருமணம் நேரலையாக யூடியூபில் ஒளிபரப்பு செய்யப்பட்டது இதற்கு மறுநாள் பீட்டர் பால் மனைவி எலிசபெத் இந்த திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

மேலும், இது முறையற்ற திருமண ஏற்பாடு என்று புகார் கூறினார் ஏனெனில் தனக்கும் பீட்டர் பாலுக்கும் விவாகரத்து ஆகாத நிலையில் அவர் மற்றுமொரு திருமணம் செய்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டிருந்தார்.

.இது சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாக மாறிய நிலையில், பீட்டர் பால்-ன் மனைவி எலிசபெத்திற்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி போன்றோர் ஆதரவாக குரல் கொடுத்த நிலையில்.

சூர்யா தேவி சற்று கோபத்துடன் வனிதாவை திட்டி பல வீடியோக்களை யூட்யூபில் வெளியிட்ட வண்ணம் இருந்தார். இதை பலமுறை வனிதா கண்டித்தும் சூர்யா அதை நிறுத்தவில்லை. இதனால் வனிதா விஜயகுமார் செய்த புகாரின் பேரில் காவல்துறை இன்று சூர்யா தேவியை கைது செய்துள்ளது.

Exit mobile version