அஜித்துடன் நடிக்க ஆசை!

பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரசன்னா. பின்னர் அழகிய தீயே படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமானார். ஆரம்ப காலகட்டத்தில் சுமாரான படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் அஞ்சாதே என்ற படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடிப்பில் அனைவரையும் மிரட்டினார்.

ajith-prasanna-000
ajith prasanna

தற்போது இவர்தான் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் வில்லன் என்ற ஒரு தகவல் கடந்த மூன்று தினங்களாக சமூக வலைதளங்களில் வலம் வந்து இருக்கிறது. இந்த தகவலை அறிந்த நடிகர் பிரசன்னா கூறியது வலிமை படத்தில் நடிக்க என்னிடம் பேசினார்கள் ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு அமையாமல் போய்விட்டது ஆனால் எதிர் வரும் காலத்தில் கண்டிப்பாக அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையும் என்று கூறினார்.

Exit mobile version