தளபதி 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அதன் பின்னணி தகவல்களும் | Thalapthy 64 Official Announcement

Thalapthy 64 Official Announcement

Thalapathy 64 update: தளபதி 64 தொடர்பான அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ திரைப்படத்தை இயக்கி உள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதை XB பிலிம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

கத்தி திரைப்படத்திற்கு பிறகு அனிருத் ரவிச்சந்தர் தளபதி 64 படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு 2020 கோடைக்காலத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தல அஜித்தை வைத்து இயக்கும் பெயரிடப்படாத திரைப்படம் அஜித் பிறந்த நாளான மே மாதம் 1-தேதி வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில் தற்போது தளபதி விஜய் அவர்களின் படமும் மே மாதம் வெளியாக வாய்ப்புள்ளது.

ஏன்? இந்த மோதல் என்றால் இந்த வருடம் தல அஜித் அவர்கள் நடித்த விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் வசூலை வாரி குவித்து உள்ள நிலையில் நடிகர் விஜய் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே தற்போது நடித்து வருகிறார்.

இது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த குறையை போக்க விஜய் அவர்கள் சிறிய இயக்குனர்களை கொண்டு குறைந்த காலத்தில் எடுக்கும் திரைப்படங்களை நடிக்க திட்டமிட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இது தமிழ் திரை உலகிற்கு மிகுந்த நற்செய்தி ஏனெனில் பெரிய நடிகர்கள் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களை தரவேண்டும் என்றுதான் தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர்.

முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் அவர்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடும் அதேவேளையில் வளர்ந்துவரும் நடிகர்களான சிவகார்த்திகேயன் போன்றவர்களும் இதுபோன்று வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களை தர வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம்.

 

Exit mobile version